ஈரோட்டில் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
ஈரோட்டில் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்ய வசதியாக நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை பொதுமக்கள் சேவைக்கு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறையில் நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும். இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இந்த வாகனம் சென்று வர உள்ளது.
வருகின்ற 20ம் தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும், 21ம் தேதி முதல் 22ம் தேதி வரை பவானி நகராட்சி பகுதிகளிலும், 23ம் தேதி முதல் 24ம் தேதி மொடக்குறிச்சி வட்டார பகுதிகளிலும், 25ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னிமலை வட்டார பகுதிகளிலும், 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளிலும், 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளிலும் ஆய்வகம் மூலம் பரிசோ தனை செய்து பயனடைய லாம். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற கைபேசி எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu