ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
X

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தற்காலிக பட்டாசு கடை விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள், நிரந்தர பட்டாசு உரிமதாரர்கள் மற்றும் தற்காலிக பட்டாசு உரிமதாரர்கள் ஆகியோர், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

விற்பனை வளாகம், கல்யாண மண்டபம், கேஸ் குடோன், பெட்ரோல் பங்க், அதிக அழுத்தமுள்ள மின்சார ஒயர்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பட்டாசு கடைகள் வைக்க அனுமதியில்லை. அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பட்டாசு கடைகள் வைக்க அனுமதியில்லை.


தரைத்தளம் தவிர மாடிகளிலும், நிலவறைகளிலும் பட்டாசுகளை சேமிக்கக்கூடாது. மேலும் வெளியேற 2 வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு சேமித்து வைக்க கூடாது. உதிரி பட்டாசுகள் விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வேறு இடத்தில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது.

புகை பிடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். மேலும், போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் பட்டாசுகளை வாகனங்களில் ஏற்றவோ, இறக்கவோ கூடாது. பட்டாசு பெட்டிகளை ஏற்ற, இறக்க இரும்பினால் ஆன கொக்கிகளை பயன்படுத்த கூடாது. அதிகளவில் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. தரமான மின் ஒயர்கள், இணைப்புகள், மின்சார சாதனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின்சார விளக்குகள் தொங்கக்கூடியதாக இருக்கக்கூடாது. சுவற்றில் பதிந்து இருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் கடையின் முன் அலங்கார விளக்கு தோரணங்கள் அமைக்கவோ, பட்டாசு விற்பனை செய்யும் கடையினுள் விற்பனையாளர், வாடிக்கையாளர்கள் கைப்பேசி உபயோகிக்கவோ கூடாது. எளிதில் தீப்பற்றக் கூடிய எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ, கடைகளின் அருகிலோ சேமித்து வைக்கக்கூடாது. பட்டாசு சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யவோ, LPG சிலிண்டர் வைக்கவோ கூடாது.

பட்டாசு விற்பனை துவங்கிய பின் அவ்விடத்தில் மற்ற பொருட்களை விற்பனை செய்யவோ, வேறு விழாக்கள் நடத்தவோ கூடாது. கடையின் பக்கத்தில் விளம்பரத்திற்காக பட்டாசுகளை தெரியும்படி வைத்திருக்கக் கூடாது. கடையின் அருகே பட்டாசு கொளுத்த அனுமதிக்க கூடாது. கைத்துப்பாக்கி பட்டாசு வெடித்து காண்பிக்க கூடாது. மற்றும் பாதுகாப்பு தூரம் சுற்றிலும் விதிமுறைகளின்படி கடை பிடிக்கப்பட வேண்டும்.

குறைந்த பட்சம் 4 + 4 தண்ணீர் வாளி, மணல் வாளிகள் மற்றும் அருகில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டி, மணல் மூட்டைகள் மற்றும் தீயணைப்பான்கள் எந்த நேரமும் பயன்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். மேற்கண்ட பொருள்களை எளிதில் கையாளத்தக்க வகையில் கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும். பட்டாசு இருப்பு அறை தனியாகவும், பட்டாசு விற்பனை செய்யும் அறை தனியாகவும் இருத்தல் வேண்டும்.

பட்டாசு இருப்பு அறை மற்றும் விற்பனை செய்யும் இடத்தில் பட்டாசுகளை கையாள்வதற்கு போதுமான இடவசதி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் கடையில் எளிதில் வெளியேறும் வகையில் அவசர கால வழி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கிய உரிமத்தில் குறிப்பிடப்பட்ட நாட்கள் வரை மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும்.

மின் தடை அல்லது மற்ற நேரங்களில் திறந்த நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகளை (Naked Lights) பயன்படுத்தக் கூடாது. டார்ச் மற்றும் பேட்டரி விளக்குகளை பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பம் ஏற்படுத்தும் ஒளி மிகுந்த விளக்குகளை கடைகளின் உள்ளே கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.

கடைகளை மூடும்போது பலமுறை கவனத்துடன் பார்வையிட்டு மின் இணைப்புகளை துண்டித்து பின் கடையை மூட வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். ஈர சாக்குகள் எந்த நேரமும் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். சீன பட்டாசுகள் எக்காரணம் கொண்டும் விற்பனை செய்தல் கூடாது எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், குற்றவியல் மேலாளர் விஜயகுமார் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story