ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு

ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் வழங்கி ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு.

ஈரோடு மாவட்டத்தில், அனைவரும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தற்போது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம், முழுவதும் 1,157 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் மாதம் தோறும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்கும் போது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. அதனை பூர்த்தி செய்து கொடுக்குமாறு ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிய ரேஷன் கார்டுகள் மூலம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்படுவார்கள். இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!