புகையில்லா போகி: ஈரோட்டில் பழைய பொருட்கள் சேகரிப்பு பணி தீவிரம்

புகையில்லா போகி: ஈரோட்டில் பழைய பொருட்கள் சேகரிப்பு பணி தீவிரம்
X
போகியின்போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, எரிப்பதற்கு பதில் அவற்றை சேகரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஈரோடு மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பழைய பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை மாநகராட்சி சார்பில் வரும் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த பணி மாநகராட்சியில் தொடங்கியது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் 12 வார்டுகளில் இதற்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மதியம் குப்பை தொட்டியுடன் ஒவ்வொரு வீட்டுக்கு வருகிறார்கள்.

அவர்களிடம் பொதுமக்கள் பழைய பொருட்களை கொடுத்து வருகின்றனர். மாநகரில் இந்த பணி நேற்று 2வது நாளாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: போகி பண்டிகை அன்று காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் புகையில்லா போகி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் காலையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறோம். தூய்மை பணியாளர்கள் வீட்டில் உள்ள. பழைய பொருட்களை குப்பை தொட்டியில் போடுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் ஒவ்வொரு நாளும் 12 வார்டு வீதம் 5 நாட்களில் 60 வார்டு களில் பழைய பொருட்களை சேகரிப்பதற்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதியம் ஒவ்வொரு வீடாக சென்று பழைய பொருட்களை சேர்த்து வருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் 60 வார்டுகளில் உள்ள பழைய பொருட்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம்.

இதேபோல் மாநகராட்சி உள்ள நான்கு மண்டலங்களிலும் 25 முக்கியமான இடங்களில் பழைய பொருட்களை சேகரிக்கும் வகையில் கலெக்சன் பாயிண்ட் வைத்துள்ளோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பழைய பொருட்களை குப்பை தொட்டியில் போட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாநகராட்சியில் பகுதியில் 20 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட் டுள்ளது.

நேற்று இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், குடியிருப்பு, அசோசியேசன், அடுக்குமாடி குடியிருப்புகளில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக தூய்மை இந்தியா இயக்கத்திற்கான பரப்புரை யாளர்கள் 32 பேரை தனியாக நியமித்து 60 வார்டுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு