அந்தியூர் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கிலோ ரூ.78.78-க்கு விற்பனை

அந்தியூர் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கிலோ ரூ.78.78-க்கு விற்பனை
X

பைல் படம்

Coconut Price Per kg - அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு கிலோ ரூ.78.78க்கு விற்பனை ஆனது.

Coconut Price Per kg -ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில், 6,143 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 5 ரூபாய் 71 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 13 ரூபாய் 81 பைசாவிற்கும், 74 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 66 ரூபாய் 66 பைசா முதல் 78 ரூபாய் 78 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 3 மூட்டைகள் எள் கிலோ 84 ரூபாய் 89 பைசாவிற்கும், 1 மூட்டை ஆமணக்கு கிலோ 71 ரூபாய் 33 பைசாவிற்கும், 9 மூட்டைகள் மக்காச்சோளம் 23 ரூபாய் 56 பைசாவிற்கும் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில், மொத்தம் 74.4 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்