அந்தியூர் விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய்பருப்பு ரூ.1.60 லட்சத்துக்கு ஏலம்

அந்தியூர் விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய்பருப்பு ரூ.1.60 லட்சத்துக்கு ஏலம்
X

பைல் படம்.

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.60 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் இன்று நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மூவாயிரம் தேங்காய்கள் கொண்டு வந்தனர். தேங்காய்கள் குறைந்தபட்சம் 5 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்சம் 14 ரூபாய் 59 காசுக்கும், சராசரியாக 9 ரூபாய் 79 காசுக்கும், 29.98 குவிண்டால் எடை கொண்ட தேங்காய்கள் மொத்தம் 30 ஆயிரத்து 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், 28 மூட்டை தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் 85 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்சம் 94 ரூபாய் 85 காசுக்கும், சராசரியாக 92 ரூபாய் 85 காசுக்கும், 16.96 குவிண்டால் எடை கொண்ட தேங்காய் பருப்பு மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற ஏலத்தில், மொத்தம் 46.94 குவிண்டால் விவசாய விளைபொருட்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், 49 விவசாயிகள் பயன்பெற்றதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!