/* */

ஈரோட்டில் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: அமைச்சர் தகவல்

ஈரோட்டில் வரும் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: அமைச்சர் தகவல்
X

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோட்டில் வரும் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். இதற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அர்ப்பணிப்புடன் முழுமையாக தேர்தல் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

இன்று (22ம் தேதி) மாலை மேட்டுக்கடை தங்கம் மகாலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

அவரைத் தொடர்ந்து இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று 4 முறை ஆளுங்கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருதவி புரிந்தனர்.

கொரோனா காலத்தில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு செய்துவரும் மக்கள் நலத் திட்டங்களால் திமுக மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 21 March 2024 7:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?