அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
3 மாவட்ட மக்களின் 65 ஆண்டு கால கனவு திட் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களின் 65 ஆண்டு கால கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் இன்று (17ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திட்டத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 1,045 குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும்.
இதனால், விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சியர்கள் ராஜ கோபால் சுன்கரா (ஈரோடு), கிராந்தி குமார் பாடி (கோவை), கிறிஸ்துராஜ் (திருப்பூர்), ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. ஜி வெங்கடாசலம் (அந்தியூர்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மேயர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu