கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பவானிசாகர் அணை பூங்கா மூடல்
பைல் படம்.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் முன்பு பொதுப்பணித்துறை சார்பாக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கண்கவர் மலர் செடி கொடிகள் உள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பவானிசாகர் அணையில் உள்ள பூங்காவிற்கு வந்து செல்வார்கள்.
இந்தநிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 3-ம் கட்ட கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தடுப்பு முறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் பவானிசாகர் அணை முன்புள்ள பொழுதுபோக்கு பூங்கா நுழைவு வாயில் அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசிடம் இருந்து மறு உத்தரவு வந்த பின்னரே மீண்டும் பவானிசாகர் அணை பூங்கா திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu