சென்னிமலையில் வரும் 10-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னிமலையில் வரும் 10-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்
X

பைல் படம்.

தைப்பூச தேரோட்டம் நடத்தக்கோரி சென்னிமலையில் வரும் 10-ம் தேதி கடையடைப்பு உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.

சென்னிமலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னிமலை வணிகர் சங்க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முருக பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னிமலை கோவில் முருகன் தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள தைப்பூசத் தேர்நிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், அன்று சென்னிமலை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இதற்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்து தேர்த்திருவிழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற துணை நிற்குமாறு கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!