ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி தீவிரம்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி தீவிரம்
X

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குழு தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிற்கிணங்க, மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இன்று (பிப்.25ம் தேதி) முதல் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களில் குழு தூய்மை பணி தலா 60 பணியாளர்களை கொண்டு இன்று (25ம் தேதி) முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் மண்டலத்திற்கு 2 வார்டுகள் என்ற அடிப்படையில் வாரத்திற்கு 8 வார்டுகள் சுத்தம் செய்யப்படுகிறது.

இந்த பணி 60 வார்டுகளிலும் மேற்கொள்ளும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, 24, 30, 36, 52 ஆகிய வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஈரோடு மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதாரத்தை ஊக்குவிப்பது, நோய் பரவுவதை குறைப்பது, சுத்தமான சூழலை பராமரிப்பது, சுகாதார நிலையை மேம்படுத்துவது என்பதன் அடிப்படையில் குழு தூய்மைப் பணி செய்யப்படுகிறது.

பொதுமக்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வீட்டிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வியாபாரிகளும், மக்களும் தவிர்க்க வேண்டும்.

குப்பைகளை தெருவில் வீசுவதை தவிர்த்து நகரம் சுத்தமாக வைத்துகொள்ள மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார்.

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!