அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் துப்புரவு விழிப்புணர்வு ஊர்வலம்

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் துப்புரவு விழிப்புணர்வு ஊர்வலம்
X

விழிப்புணர்வு ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படம்

பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.ஊமாரெட்டியூரில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பேரூராட்சித் தலைவர் கே. என். வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஜூலி பெரியநாயகம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் டி. அருண்குமார் வரவேற்றார்.

முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில் சுற்றுப்புற சுகாதாரம், தூய்மையின் அவசியம் குறித்து பொதுக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, ஊமாரெட்டியூர் பகுதியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் பேரூராட்சித் தலைவர் கவிதா ரவி மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future