அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலை சுத்தம் செய்த வேளாண் கல்லூரி மாணவிகள்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலை சுத்தம் செய்த வேளாண் கல்லூரி மாணவிகள்
X

கோவிலை சுத்தம் செய்த கல்லூரி மாணவியர். 

அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலை, ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள், அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலை சுத்தம் செய்தனர். இளங்களை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள், கிராமத்தில் தங்கல் திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டு மாணவர்கள் கிராமப்புறங்களில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பார்.

அதன்படி, இறுதி ஆண்டு பயிலும் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் அனுஷியா, தர்ஷினி, சௌமியா, பவித்ரா. நதிஷாதேலி, மீனாட்சி, செளந்தர்யசெல்லிகா, தீபிகா, சரோஜினி, கௌசல்யா ஆகியோர் பகுதியில், அந்தியூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு விவசாய தொழில் நுட்பத்தினை பயிற்றுவித்து வருகின்றனர்.

இதனையடுத்து மாணவிகள் அந்தியூர், செல்லிஸ்வரர் பத்ரகாளியம்மன் கோவிலை சுத்தம் செய்தனர். திருக்கோயில் வளாகத்தில் உள்ள குப்பைகள், தேவையற்ற செடிகளை அகற்றினர். கோயில் பிரகாரம், மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !