10,12ம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவக்கம்: ஈரோடு மாவட்டத்தில் தேர்வெழுதும் 4,181 பேர்

10,12ம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவக்கம்: ஈரோடு மாவட்டத்தில் தேர்வெழுதும் 4,181 பேர்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவங்குகிறது. இதற்காக மாவட்டத்தில், 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பிளஸ் -2 துணை தேர்வு இன்றுடன் (1ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (2ம் தேதி) முதல் பிளஸ்- 1 மற்றும் 10ம் வகுப்பு துணை தேர்வு துவங்க உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வு நாளை துவங்கி வரும் 8ம் தேதி நிறைவடைய உள்ளது.ஈரோடு, பெருந் துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. 2,615 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதேபோல், பிளஸ்1 தேர்வு நாளை (2ம் தேதி) துவங்கி துவங்கி வரும் 10ம் தேதி நிறைவடைகிறது.

இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்