அந்தியூர் சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
அந்தியூர் சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கர்ப்பிணிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டார அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கர்ப்பிணி தாய்மார்களோடு சமத்துவ பொங்கல் வைத்து சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ பெண் தன்னார்வலர்கள் கொண்டாடினர்.
முன்னதாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வண்ண கோலமிட்டு புதுப் பானையில் புத்தரசி போட்டு பொங்கல் வைத்து பொங்கல் பொங்கியதும், பொங்கலோ பொங்கல் என குலவியிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, கதிரவனை வழிபட்டு பகுதி பொங்கல் பானையை சுற்றி கும்மி அடித்து பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சொந்த செலவில் 25க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு முழு கரும்பு, பச்சரிசி , குண்டு வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, பழங்கள், இனிப்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வழங்கினர்.
இதில், அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu