பவானியில் கிறிஸ்துவ புத்தகக் கண்காட்சி தொடக்கம்

பவானியில் கிறிஸ்துவ புத்தகக் கண்காட்சி தொடக்கம்
X

பவானியில் கிறிஸ்துவ புத்தகக் கண்காட்சியை அகில இந்திய தேவசபை தலைமைப் போதகர் ஜார்ஜ் பால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன், சிஎஸ்ஐ தேவாலய ஆயர் விக்டர் ராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

பவானி, தேவபுரம் எல்ஈஎப் இம்மானுவேல் மழலையர் மற்றும் சிறுவர் பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய அரங்கத்தில் கிறிஸ்துவ புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி, தேவபுரம் எல்ஈஎப் இம்மானுவேல் மழலையர் மற்றும் சிறுவர் பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய அரங்கத்தில் கிறிஸ்துவ புத்தகக் கண்காட்சி தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இக்கண்காட்சி திறப்பு விழாவுக்கு பவானி சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் தேவாலயத்தின் ஆயர் விக்டர் ராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய தேவசபை தலைமைப் போதகர் ஜார்ஜ் பால் ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் திறந்து வைத்தார். எல்ஈஎப் பள்ளித் தாளாளர் எஸ்.கிறிஸ்டியன் ஜான்சன் வரவேற்றார். எஸ்எஸ்ஐ ஜெயராமன், ஜேகேகேஎம் நர்சிங் காலேஜ் டீன் ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர்கள் அகஸ்டின், பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வரும் 20-ம் தேதி வரையில் நடைபெறும் இக்கண்காட்சியில் ஆங்கிலம், தமிழ் வேதாகமம், விளக்க உரைகள், ஆன்மீக வளர்ச்சி, சாட்சிக்குரிய புத்தகங்கள், லேமினேஷன் போர்டுகள், பைபிள் கவர்கள், காணிக்கை பைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு : 98654 26597, 90470 52700.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!