சித்தோடு: லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

சித்தோடு: லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
X

பைல் படம்.

சித்தோடு- காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் வாட்டர் சீட்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காஞ்சிகோவில் பிரிவு காபி பார் அருகில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சித்தோடு, நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 51) என்பதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 2 துண்டு சீட்டுகள், 110 ரூபாய் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!