சித்தோடு: தனியார் நிதி நிறுவனத்தில் மோசடி

சித்தோடு: தனியார்  நிதி நிறுவனத்தில் மோசடி
X

பைல் படம்.

சித்தோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

சித்தோடு தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பிரியா (44). தனது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில், பிரியா சித்தோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தனது, மூன்றரை பவுன் தங்க நகை ஒன்றை அடமானம் வைத்து ரூ.58 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்.


இதனைத் தொடர்ந்து பிரியா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி ரூ.50 ஆயிரம் பணம் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த நிதி நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றிய பவானி ஜம்பை பகுதியை சேர்ந்தவர் பிரியாவின் பெயரில் ரூ.8 ஆயிரம் கட்டி பிரியாவின் நகையை ரூ.82 ஆயிரத்து 800-க்கு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மேலாளர் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்தார்.


இதனையடுத்து, பிரியா பலமுறை நிதி நிறுவனத்திற்கு சென்று தனது நகையை வழங்கக்கோரி கேட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவனத்தினர் நகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று நிதி நிறுவனம் சென்ற பிரியா இன்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு தொடங்கிய போராட்டம் இன்று அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நீடித்தது.

சித்தோடு போலீசார் பிரியாவிடம் சமரச பேச்சு வார்த்தையில் நகையை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததை என உறுதி தொடர்ந்து பிரியா தனது உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!