அரசு பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது
கைது செய்யப்பட்ட ஜாமல்தீன்.
சேலம் மாவட்டம், சீலநாயகன்பட்டியை சேர்ந்தவர் ஜமால்தீன் ( 37) .கூலித்தொழிலாளியான இவர் ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள மாமரத்துபாளையத்தில் நூல் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று மதுபோதையில் அரசு பேருந்தில் பயணம் செய்த நிலையில் பேருந்தில் இருந்த சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.
இதனால் கோபமடைந்த ஜமால்தீன் பேருந்தில் வெடிக்குண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, போலியாக வெடிகுண்டு வதந்தியை பரப்பிய குற்றத்திற்காக ஜமால்தீன் மீது சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu