ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் முதற்கட்டமாக 26 பள்ளிகளும், மலைப்பகுதியான தாளவாடி தாலுகாவில் 38 பள்ளிகள் என மாவட்டத்தில் மொத்தம் 68 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 3,455 மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிடலாம். காலை உணவு சாப்பிட்ட பின்னர், பள்ளி வகுப்பறைக்கு சென்று படிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!