ஈரோட்டில் நாளை அரசு விழா: ரூ.1,369 கோடியில் திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

ஈரோட்டில் நாளை அரசு விழா:   ரூ.1,369 கோடியில் திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோட்டில் நாளை (டிச.20) வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில், ரூ.1,369 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்து, 50,088 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ஈரோட்டில் நாளை (டிச.20) வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில், ரூ.1,369 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்து, 50,088 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.20ம் தேதி) வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில், அவர் ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, ரூ.133.66 கோடி 222 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இவ்விழாவில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags

Next Story
உப்பு கருவாடும் ஊற வெச்ச சோறும்..உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் கருவாடு!