ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதல்அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதல்அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
X
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொளி வாயிலாக பங்கேற்று திறந்து வைக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதில் முடிவுற்ற பணிகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு காணொளி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.

இதில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் மூலம் கட்டப்பட்ட தேர்தல் அலுவலக கட்டிடம் மற்றும் சில பள்ளி கட்டிடங்களை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Tags

Next Story
ai automation in agriculture