ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் 3-வது சிலை திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் 3-வது சிலை  திறப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் 3வது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Karunanidhi Statue -ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் 3-வது சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து கொட்டும் மழையில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Karunanidhi Statue -ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டியில் படிப்பகத்துடன் கூடிய 8 அடி உயரமுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது;-

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் 3-வது சிலையை திறந்து வைத்துள்ளேன். ஏற்கனேவ ஈரோட்டில் கடந்த 2018-ஆம் திருவிக வீதியில் முதன் முதலில் கலைஞர் சிலையை திறந்து வைத்தேன். 2-வது சிலையை ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் திறந்து வைத்துள்ளேன். இப்போது 3-வது சிலையை கள்ளிப்பட்டியில் திறந்து வைத்திருக்கிறேன்.இந்த கலைஞர் சிலையை உருவாக்கி தருவதற்கு நல்லசிவம், அமைச்சர் முத்துசாமி மற்றும் டி.என்.பாளையம் ஒன்றிய ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன் ஆகியோர் பல்வேறு தீய சக்திகளை மீறி கலைஞர் சிலையை அமைத்து தந்திருகிறார்கள்.


முத்துசாமி கழகத்தின் சொத்து சாமி, மாவட்ட செயலாளர் நல்லசிவம் பெயரில் நல்ல உள்ளது. இங்கு கருணாநிதின் சிலையை திறந்து வைக்க ஒரு தொண்டனாக வந்துள்ளேன். கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர் ஆக இருந்தாலும் கலைஞரை உருவாக்கியது ஈரோடு தான், ஈரோடு பள்ளியிலும், காஞ்சியில் கல்லூரியில், படித்தேன் என்று கலைஞர் சொல்லுவார்.திராவிட கழக கொடிய உருவாக்க யோசித்த போது நடுவில் பூச சிவப்பு நிறம் கிடைக்கவில்லை, உடனே கையில் குண்டூசிய எடுத்து கையில் குத்தி இரத்தத்தின் மூலம் கொடியை உருவாக்கினார்.

இப்போதெல்லாம் கட்சி தொடங்குபவர்கள் எடுத்தவுடன் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் தி.மு.க. 1949-இல் தொடங்கப்பட்டு 57-இல் தான் தேர்தலில் வெற்றி பெற்றது.தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறிகளை நிறைவேற்றி கொண்டுயிருக்கிறோம், சொன்னதையும் செய்வோம் சொல்வதையும் செய்வோம் என்று கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் கொட்டும் மழையிலும் உரையாட்டினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது