ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி
X

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம். உடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிச‌.14) சனிக்கிழமை காலை 10.12 மணிக்கு உடல் நலக்குறைவால் சென்னை கிண்டி மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


இதனையடுத்து, அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு, கோவி.செழியன், மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!