கோவில் குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் காயம்

கோவில் குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  தலைமை காவலர் காயம்
X

கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை காவலரை நேரில் சென்று நலம் விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.

தாளவாடி கொங்கஹள்ளி கோவில் குண்டம் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பங்களாப்புதூர் தலைமை காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி கொங்கள்ளி மல்லிகார்ஜுனா கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பங்களாப்புதூர் தலைமை காவலர் பாலசுப்ரமணியம் மீது விழுந்தது.இதில் அவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் பாலசுப்ரமணியத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் சென்று மருத்துவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்நிகழ்வின் போது, கோபி டிஎஸ்பி ஆறுமுகம் மற்றும் கோபி இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!