அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்கரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான போட்டி
சக்கரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான சதுரங்கப் போட்டி.
தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்கரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான சதுரங்கப் போட்டி அறச்சலூர் நவரசம் கல்லூரியில் 2 நாள்கள் நடக்கிறது.
ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்கரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் சக்கரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான 27வது மாநில ரேபிட் மற்றும் 26வது மாநில ப்ளீட்ஸ் சதுரங்க போட்டி அறச்சலூர் நவரசம் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற ஜூன் 1ம் தேதியும் , 2ம் தேதியும் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் மொத்தம் 500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூபாய் 50,000 மதிப்புள்ள ரொக்கமாக பரிசுகளும், கோப்பைகளும், சான்றிதழும் வழங்கப்பட இருக்கின்றன. இப்போட்டியை சக்கரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை இயக்குனர் சக்கரா ராஜசேகர், பிரபா ராஜசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க உள்ளனர்.
ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் மாஸ்டர் ஜி, நவரசம் கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் தாமோதரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிசாமி, முதல்வர் செல்வம், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கவிதா மற்றும் சீப் ஆர்பிட்டர் உமாபதி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைக்க உள்ளனர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கேடயம், ரொக்கம், சான்றிதழ் அனைத்தும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் செயலாளர் முனைவர் ரமேஷ் செய்து வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu