சென்னிமலை முருகன் கோவில் ரூ.55.23 லட்சம் உண்டியல் காணிக்கை

சென்னிமலை முருகன் கோவில் ரூ.55.23 லட்சம் உண்டியல் காணிக்கை
X

சென்னிமலை முருகன் கோவில்.

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.55.23 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருள்மிகு முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் உதவி ஆணையர் வே.சபர்மதி, ஈரோடு கோவில் உதவி ஆணையர் கோமதி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில் 55,23,313 ரூபாய் பணம் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது.

அதேபோல் 196 தங்கமும், 2,665 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. உண்டியல்கள் எண்ணும் பணியில் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கோவில் பணியாளர்கள் மற்றும் எம்.பி.என். எம்.ஜெ. கல்லூரி மாணவர்கள், கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு