அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோயிலில் 23ல் தேரோட்டம்

அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோயிலில் 23ல் தேரோட்டம்
X

பொதியமூப்பனூர் தம்பிக் கலை அய்யன் சுவாமி பைல் படம்

அந்தியூர் அருகே பொதியாமூப்பனூரில் தம்பிக் கலை அய்யன் கோயிலில் வரும் 23ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

அந்தியூர் அருகே பொதியாமூப்பனூரில் தம்பிக் கலை அய்யன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி முதல் வாரத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திரு விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தம்பிக்கலை அய்யனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 23, 24ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. 42 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் தம்பிக் கலை அய்யனும், 36 அடி உயரம் கொண்ட தேரில் மாடசாமியும் வலம்வர உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 30ம் தேதி மறு பூஜையும், அடுத்த மாதம் 7ம் தேதி பால் பூஜையுடன் விழா நிறைவடைகின்றது.

Tags

Next Story