கோபிசெட்டிபாளையம்: பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

கோபிசெட்டிபாளையம்: பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
X

பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்திருப்பதை படத்தில் காணலாம்.

எரப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எரப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகளும், ஒரு சமையலறையும் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து இருந்தன. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் பவானி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பராமரிப்பு பணிகளை செய்து தருமாறு கூறி இருந்தார்.

இந்த நிலையில், பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் துறை சாதனை - பெரியார் பல்கலை போட்டிகளில் இரண்டாம் இடம்