/* */

ஈரோடு: காவிரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் - கலெக்டர் எச்சரிக்கை

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, கரையோர மக்கள் கவனம்.

HIGHLIGHTS

ஈரோடு: காவிரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் - கலெக்டர் எச்சரிக்கை
X

ஈரோடு காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. கரையோரம் நின்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதாலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டு உள்ளதாலும் ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, புகைப்படம் எடுத்து கொள்வது போன்ற காரணங்களுக்காக ஆற்றுக்கு செல்ல கூடாது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் ஆறு, வாய்க்கால்களில் குளிக்கவோ, சுற்றி பார்க்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும். மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் மலைப்பாதைகளில் போக்குவரத்து தடை ஏற்படவும், உயிர் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மலைகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதேபோல் தொடர் மழை காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள் வெள்ளநீரில் முழ்கும் அபாயம் உள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகத்தின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Updated On: 21 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்