சித்தோடு அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு

சித்தோடு அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு
X
பைல் படம்.
சித்தோடு அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட, சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கன்னிமார்காடு பகுதியில், அரசு அனுமதியின்றி சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பவானி பகுதியை சேர்ந்த யுவராஜ், ராஜா, தனபால், பிரபு, நந்தகுமார், சுரேஷ், சந்தோஷ், மணிகண்டன் மற்றும் சுந்தர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள் மற்றும் நான்காயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!