கவுந்தப்பாடி அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் மோதி விபத்து தொழிலாளி பலி

கவுந்தப்பாடி அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் மோதி விபத்து தொழிலாளி பலி
X

பைல் படம்.

கவுந்தப்பாடி அருகே தனியார் பேருந்து - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தச்சு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 35). தச்சு தொழிலாளி. கணேசமூர்த்திக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று அய்யம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பெற்றோர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தற்போது, கவுந்தப்பாடி கோபி மோதியதில், கணேசமூர்த்தி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!