பங்களாப்புதூர் அருகே கார், தனியார் பேருந்து மோதி விபத்து

பங்களாப்புதூர் அருகே கார், தனியார் பேருந்து மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.

பங்களாப்புதூர் அருகே புதுமண தம்பதியர் சென்ற காரும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் அருண் (28) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சக்திநகரை சேர்ந்த பிரான்ஸி (25) என்பவருக்கு ஆப்பக்கூடலில் திருமணம் அப்போது, முடிந்து கோவையில் உள்ள வீட்டுக்கு உறவினர்களுடன் இரண்டு கார்களில் புறப்பட்டு சென்றனர். ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் பங்களாப்புதூர் மத்தளகொம்புபிரிவு என்ற இடத்தில் வரும்போது முதலில் மணமக்கள்சென்ற, கார் வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்தின் பின்பக்கத்தின் மோதி கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மணமக்கள் வந்த காரை ஓட்டி வந்த பிரதீப்குமார் (28), மணமக்கள் மற்றும் உடன்வந்தவர்கள் ஆகியோருக்கு சிறிய காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பினர், அதேபோன்று தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் தண்டபாணி (55) உட்பட பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.திருமண வீட்டார் வேறு வாகனம் ஏற்பாடு செய்து வீடு திரும்பினர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!