இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சேகர்.இவர் பவானி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். மறவன் குட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்தியூரிலிருந்து பின்னால் அம்மாபேட்டை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சேகர், அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu