சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
X

விபத்து ஏற்படுத்திய கார். 

சத்தியமங்கலம் அருகே விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் விண்ணப்பள்ளி அருகே சத்தியமங்கலத்திலிருந்து விண்ணப்பள்ளி நோக்கி, இருசக்கர வாகனத்தில் விண்ணப்பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்ற‌ வெங்கடாசலம் மீது மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் வெங்கடாசலத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, விண்ணப்பள்ளி பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், காரை ஓட்டி வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் மற்றும் புஞ்சை புளியம்பட்டி போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!