அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன பிரச்சார இயக்கம்

அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன பிரச்சார இயக்கம்
X

அந்தியூரில் ஒன்றிய அரசை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் கண்டன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன பிரச்சார இயக்கம் நேற்று நடைபெற்றது.

அந்தியூர் வெள்ளித்திருப்பூர் கொமராயனூர் சென்னம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கண்டன பிரசார இயக்கத்தின் போது, டீசல் பெட்ரோல் சமையல் எரிவாயு விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பிரச்சாரம் நடந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கு. தங்கராசு, விசிக மாநில வணிக ரணி துணை செயலாளர் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தேவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா துணை செயலாளர் கனகராஜ் ஆகியோர் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன பிரச்சாரம் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் விசிக வடக்கு மாவட்ட ஊடக மையம் அமைப்பாளர் சுரேஷ், வணிகமணி மாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யை சேர்ந்த அப்புசாமி மற்றும் திராவிட வீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!