தொழில் சார் சமூக வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர் தகவல்
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஈரோடு மாவட்டத் தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னி மலை மற்றும் தாளவாடி ஆகிய 5 ஒன்றியங்களில் 77 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வரும் சிறு, குறு,நுண் நிறுவன செயல்பாடுகளை, தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு ஊராட்சிக்கு ஒருவர் வீதம் தொழில் சார் சமூக வல்லுனர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப் பிப்பவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்தவராகவும், அதே ஊராட்சியை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 25 வயதில் இருந்து 45 வயது உடையவர்களாக இருத்தல் வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கியில் சமூகபணி, வணிகவியல், வேளாண்மை, வணிகநிர்வாகம் கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆன்டிராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும். அதை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகியாகவோ அல்லது பணியாளராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ இருக்கக்கூடாது.
மேற்கண்ட தகுதிகளை உடையவர்கள் தங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu