ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்பட்டு, ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1,400 பெண்களுக்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வாங்குவதற்கு ரூ.17 ஆயிரத்து 500, தீவன செலவினமாக ரூ.1,000 காப்பீட்டு தொகையாக ரூ.875 மேற்கொள்ளப்படும். மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள். இ
ந்த திட்டத்தில் பயன்பெற நிலமற்ற விவசாய கூலித்தொழில் செய்யும் பெண்ணாக இருக்க வேண்டும். 60 வயதுக்குள் இருக்க வேண்டும். சொந்தமாக ஆடு, மாடு, எருமைகள் வைத்திருக்ககூடாது. அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் அடைந்தவர்களாக இருக்கக்கூடாது.
தகுதி வாய்ந்த பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலமற்றவர், இதர தகுதிகள் உள்ளன என்பதை சரிபார்த்ததற்கான சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு கால்நடை மருந்தகத்தில் வருகிற 9-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu