அந்தியூர் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் 2வது முறையாக ஒத்திவைப்பு

அந்தியூர் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் 2வது முறையாக ஒத்திவைப்பு
X

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸ்.

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று காலை நடைபெற்றது.இதில் திமுகவை சேர்ந்த 15வது வார்டு கவுன்சிலரும், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான பாண்டியம்மாள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்தது.

கவுன்சிலர்கள் யாரும் வராததால் மறுதேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.இது சம்பந்தமான நோட்டீஸ், அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. கவுன்சிலர்கள் யாரும் வராததால் இரண்டாவது முறையாக உப தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!