சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மலைப்பாதையில் பஸ்கள் இயக்கம்!

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மலைப்பாதையில் பஸ்கள் இயக்கம்!
X
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மலைப்பாதையில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன.

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் மலைப்பாதையில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன.

ஈரோடு சென்னிமலையில் உள்ள மலையின் மீது உள்ள சுப்பிரமணியசுவாமி என்னும் முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைப்பு பணி கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளது. இதனால், பக்தர்கள் படிக்கட்டு வழியாக சென்று சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக இனி செவ்வாய்க்கிழமை மட்டும் கோவிலுக்கு சொந்தமான பஸ்கள் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை மலைக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story
ai solutions for small business