கோபிசெட்டிபாளையம் அருகே பேருந்து - கார் மோதி விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே பேருந்து - கார் மோதி விபத்து
X
விபத்தில் மோதிய கார் மற்றும் பேருந்து.
கோபி அருகே அரசு பேருந்தும் - காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு-கோபிசெட்டிபாளையம் வரை நான்கு வழிச்சாலைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், அங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு சாலை குறுகலாக உள்ளது. இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஒத்திக்குதிரை என்ற இடத்திற்கு சென்ற போது, எதிரே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து, இடதுபுறம் நான்கு வழிச்சாலைக்கான பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததால், கார் பள்ளத்தில் இறங்காமல் இருக்க, காரின் ஓட்டுநர் காரை வலது பக்கமாக திருப்பினார். இதனால், கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் நிலை தடுமாறிய கார் மற்றும் பேருந்து சிறிது தூரம் தாறுமாறாக ஓடி நின்றது. விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் வந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் காரின் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை