அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய திருவிழாவான எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்ற போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி மாத குண்டம் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடக்கிறது. இதையடுத்து, கடந்த 17ம் தேதி இப்பண்டிகைக்கான பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பங்குனி குண்டத்தின் முக்கிய நிகழ்ச்சியான, மகிசாசூரமர்த்தனம் என்னும் எருமைக்கிடா வெட்டும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. முன்னதாக, ஆதிரெட்டியூர் பிரிவிலிருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், எருமைகிடாவை பலி கொடுப்பதற்கு அம்மனிடம் வாக்கு கேட்கப்பட்டது.
அம்மன் வாக்கு கொடுத்ததை தொடர்ந்து, கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள குண்டம் இறங்கும் இடத்திற்கு அருகே, எருமைகிடா பலி கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு பரவசமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu