பிராட்பேண்ட் - கைப்பேசி சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகைகள் அறிவிப்பு

பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து புதிய ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளும் முதல் மாத வாடகைக் கட்டணத்தில் 90 சதவீதம் தள்ளுபடி செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சலுகை மூலம் புதிதாக ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 500 வரை தள்ளுபடி பெறலாம். இச்சலுகை ஜனவரி 29ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.இதன்படி ஃபைபர் பிளான் ரூ. 399க்கு முதல் மாதக் கட்டணம் ரூ. 40 உடன் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும்.ஃபைபர் பிளான் ரூ.599க்கு முதல் மாதக் கட்டணம் ரூ. 99, ஜி.எஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும். ஃபைபர் பிளான் ரூ.799க்கு முதல் மாதக் கட்டணம் ரூ. 299. ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும்.ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பிஎஸ்என்எல் லேண்ட் லைன் தொலைபேசி வைத்திருப்போர் ஃபைபர் இணைப்புக்கு மாறும்போது முதல் 6 மாதங்களுக்கு மாத வாடகையில் ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படும். கூடுதல் சலுகையாக புதிய ஃபைபர் இணைப்பு வழங்கப்படும்.
அனைத்து இணைப்புகளுக்கும் அமைப்புக் கட்டணமான ரூ. 500 தள்ளுபடி செய்யப்படும், கைப்பேசி சேவையில் எப்ஆர்சி 100க்கு மேல் உள்ள பிளான் அனைத்துக்கும் இலவச சிம் கார்டுகள் அனைத்து வேலை நாள்களிலும் நவம்பர் 30ஆம் தேதி வரையும், எப்ஆர்சி 48க்கு இலவச சிம் கார்டுகள் அனைத்து வேலை நாள்களிலும் டிசம்பர் 31ஆம் தேதி வரையும், ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல். வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu