பவானி அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பவானி அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
X

சிறுவன் அபினேஷ்.

அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியதில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தார்.

ஈரோடு மாட்டம் பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி சரண்யா தம்பதியினர். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். இதில் 1ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகன் அபினேஷ் (வயது 6) வீட்டின் எதிரே உள்ள இடத்தில் விளையாடுவது வழக்கம்.

இதற்கிடையே ராமகிருஷ்ணன் என்பவர் புதியதாக வீடு கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அடித் தளத்திற்கு 8அடி குழி தோண்டி உள்ளார். இதையடுத்து நேற்று மாலை நேரத்தில் மழை பெய்தது காரணமாக குழியில் மழைநீர் தேங்கியது. இதன் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் அபினேஷ் தீடிரென இரவில் மகனை காணவில்லை என பெற்றோர் தேடி பார்த்த நிலையில் குழியில் இறங்கி தேடியபோது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குழியில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil