ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, ஈரோடு மாவட்டத்தில், வீடு தோறும் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட நகர்ப்புற தேர்தலில் 771 வார்டுகள் உள்ளன. திமுக - அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 2,724 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்காளர்கள் ஓட்டளிக்கும் அனுமதி சீட்டான 'பூத் சிலிப்' வழங்குவது, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, துவங்கியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், வருவாய் துறையினர், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வினியோகிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணியை, வரும் 18ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!