ஈரோடு மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்
X

ஈரோடு மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரம் முன் களப்பணியாளர்கள், 6 ஆயிரம் சுகாதார துறை பணியாளர்கள், 9 ஆயிரம் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முன்கள பணியாளர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றில் எந்த தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்களோ அதையே அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டது.

Tags

Next Story