ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு போனஸ் வழங்கும் விழா: அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு போனஸ் வழங்கும் விழா: அமைச்சர் பங்கேற்பு
X

 தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி.

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி மற்றும் அந்தியூர் பகுதிகளில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்க உள்ளார்.

அதன்படி பவானி நகரத்தில் இன்று மதியம் 2 மணிக்கு மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு போனஸ் வழங்குகிறார். தொடர்ந்து பவானி ஒன்றியத்தில் மதியம் 2.45 மணிக்கு கவுந்தப்பாடி கிளை அமைப்புச்சாரா ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க துவக்க விழா மற்றும் பாவா திருமண மண்டபத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு போனஸ் வழங்குதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

கோபி ஒன்றியம் பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மதியம் 3:30 மணிக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு போனஸ் வழங்குதல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ‌

அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நெசவாளர்களுக்கான போனஸ் வழங்கும் விழாவில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொள்கிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!