ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
X
ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர், ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சில மணி நேரங்களில் வெடிக்கும் எனவும் தெரிவித்து தொலைபேசியை துண்டித்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்களை சோதனை செய்தனர்.

இந்நிலையில், ஈரோடு பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ஈரோடு ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு காவல்துறையினர், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா