பர்கூர் மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்

பர்கூர் மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்
X

பள்ளத்தில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்.

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் ஊசிமலை பகுதியை சேர்ந்தவர் நாகன் மகன் பூபதி (வயது 22). இவர் இன்று மாலை 4 மணியளவில் பர்கூரிலிருந்து பொக்லைன் இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

பர்கூரிலிருந்து 2 கி.மீ தூரத்திற்கு இடையே வந்த போது, பொக்லைன் இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பூபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!