தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
X

தற்கொலை செய்து கொண்ட காவலருக்கு மரியாதை செலுத்திய மற்ற காவலர்கள்

அந்தியூரில் தற்கொலை செய்து கொண்ட தலைமைக் காவலர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக, பங்களாபுதூர் அடுத்த கடம்பூர் மலைப்பகுதிக்கு தனது காரில் சென்ற தலைமை காவலர் வேலுச்சாமி, காரை நிறுத்திவிட்டு, பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவ்வழியே பயணம் செய்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தலைமைக் காவலர் வேலுச்சாமியின் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான தவிட்டுப்பாளையத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தியூர் மயானத்தில் வைக்கப்பட்டிருந்த காவலர் வேலுச்சாமியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர் வேலுச்சாமிக்கு ரம்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி